பேய்க்கும் பாம்புக்கும் சண்ட ; 101க்கு பிறகு பகீர் கிளப்ப போகும் நந்தினி..!

nandhini 100 day

சின்னத்திரை வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி பெற்று சாதனை படைத்து கொண்டிருக் நந்தினி மெகாத்தொடர். மெகாத்தொடர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வழக்கத்தை மாற்றி புதிய கால்தடத்தை பதித்த பெருமை நந்தினி தொடரையே சேரும். இந்த தொடர் முழுக்க முழுக்க சினிமா தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது .

நந்தினி தொடர் சன் தொலைக்காட்சியில் டைரக்டர் சுந்தர்.சியுடன் அவனி சினி மேக்ஸ் பிரைவட் லிமிட் தயாரித்துள்ளது. டைரக்டர் சுந்தர்.சியின் கதைக்கு வெங்கட் ராகவன் திரைக்கதை அமைத்து பத்ரி கே.என் நடராஜன் வசனம் எழுதி யு.கே செந்தில் குமார் ஒளிபதிப்பில் இந்த வெற்றி தொடரை இயக்குனர் ராஜ்கபூர் இயக்கியுள்ளார்.

இந்த தொடர் நூறாவது எபிசோடை வெற்றிகரமாக தொட்டுள்ளது. இதை முன்னிட்டு நந்தினி குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பொதுவாக ஒன்று ஆவி மிரட்டு.. இல்லையென்றால் பாம்பு மிரட்டும்.. ஆனால் இங்கே ஆவிக்கும் பாம்புக்கும் சண்டை என்றால் கேட்கவா வேண்டும்..?

சுவாரசியமான கதைக்களத்தில் செல்லும் இந்த தொடரில் நந்தினி யார்..? என்று கேள்விகளுக்கு விடை உள்ளது. சின்ன திரையில் குறுகிய காலத்தில் நந்தினி பெற்ற ஆதரவிற்கு முக்கிய காரணம் பிரமாண்டம் மற்றும் அதன் சினிமா தரமும்தான்.

இன்று அனைவரும் பாகுபலியை பற்றி தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.. ஆனால் இரவு 9 மணி ஆகிவிட்டால் அனைவரின் கவனமும் நந்தினி தொடரை மிஸ் செய்யாமல் பார்ப்பதில் திரும்பி விடுகிறது. அந்த அளவுக்கு ரசிகர்களை நந்தினி தொடர் கவர்ந்துள்ளது. மேலும் பல இடங்களில் ஷூட்டிங் எடுத்துள்ளனர். மலேசியா ,மைசூர், கள்ளிடைகுறிச்சி, பொள்ளாச்சி ,ரிஷிகேஷ் போன்ற இடங்களில் ஷூட்டிங் எடுத்துள்ளனர்.

தயாரிப்பாளர் சுந்தர்.சி இத்தொடரை ஆர்வத்துடன் பார்த்துவிட்டு தனது கருத்தை தெரிவிப்பதுடன் சில திருத்தங்களும் செய்வாராம். நந்தினி தொடர் கன்னடம், தெலுங்கு. தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

கிளாமர் அதிகமாக உள்ளது என்ற விமர்சனம் இருக்கிறது. இளைஞர்களிடம் நந்தினி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. குஷ்பூ இந்த தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். அது மட்டும் அல்லாமல் மற்றுமொரு பிரபலமும் இத்தொடரின் முக்கிய பகுதி ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்கிறார் இயக்குனர் ராஜ்கபூர்..