“நாகேஷ் திரையரங்கம்’ டீசரை வெளியிட்டார் சூப்பர்ஸ்டார்..!

nagesh thiraiyarangam teaser launch

நெடுஞ்சாலை, மாயா வெற்றிப்படங்களை தொடர்ந்து ஆரி தற்போது ஹீரோவாக நடித்துள்ள படம் ’நாகேஷ் திரையரங்கம்’. ஒரே ஷாட்டில் ’அகடம்’ என்ற படத்தை எடுத்து கின்னஸ் சாதனை படைத்த இயக்குனர் இசாக் இப்படத்தை இயக்கியுள்ளார்.. இந்தப்படத்தில் ஆரிக்கு ஜோடியாக ஆஸ்னா ஜவேரி நடித்திருக்கிறார்.

ஒரு தியேட்டரை மையமாக கொண்டு நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு தமிழ்சினிமாவின் தலைசிறந்த நடிகரான நாகேஷின் பெயரில் இருந்த திரையரங்கத்தின் நினைவாக டைட்டில் வைத்ததுமே படத்தின் மேல் தனி கவனம் விழுந்துவிட்டது.

’நாகேஷ் திரையரங்கம்’ படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் இந்தப்படத்தின் டீசரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். அவரது இல்லத்தில் வைத்தே இந்த நிகழ்வு நடைபெற்றது.. இந்தநிகழ்வில் படக்குழுவினருடன் சீனியர் நடிகையான லதாவும் கலந்துகொண்டார்..

நாகேஷுக்கும் ரஜினிக்கும் இடையே இருந்துவந்த நட்பு ஆத்மார்த்தமானது.. உலகறிந்தது.. அதனாலேயே அவர் பெயரில் உருவாகியுள்ள படம் என்றதுமே எந்த மறுபேச்சும் இல்லாமல் இந்தப்படத்தின் டீசரை வெளியிடுவதற்கு சம்மதித்தாராம் ரஜினி.