முதல் படத்திலேயே ‘நகல்’ எடுக்கும் இயக்குனர்..!

nagal

இன்றைய சூழலில் திரையுலகில் இயக்குனராக அடியெடுத்து வைக்கும் புதியவர்கள், தங்களது படைப்பில் வித்தியாசம் காட்டி கவனம் ஈர்த்தால் ரசிகர்களிடம் தங்களை தக்கவைக்க முடியும்.. அந்தவிதத்தில் புதுமையான கதைக்கருவுடன் களமிறங்கி இருக்கிறார் அறிமுக இயக்குனரான சுரேஷ் குமார்.

இவர் இயக்குநர் சசி மற்றும் இயக்குநர் சுசீந்திரன் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். இவர் இயக்க இருக்கும் திரைப்படத்திற்கு ‘நகல்’ என டைட்டில் வைத்துள்ளார்கள்.. ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே மையமாக கொண்டு உருவாக இருக்கும் இந்த ‘நகல்’ படத்தில் நடிப்பதற்கு தற்போது சில முன்னணி கதாநாயகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் இயக்குநர் சுரேஷ் குமார்.

“ஒரு பெண்ணின் அமானுஷ்ய அனுபவங்களை மையமாக கொண்டு தான் எங்களின் ‘நகல்’ படத்தின் கதை நகரும். ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் இருப்பதால், ‘நகல்’ படத்தின் கதையை எழுதுவதற்கு சற்று சவாலாகவே இருந்தது. தனித்துவமான முயற்சியில் முழுக்க முழுக்க திகில் அனுபவங்களை கொடுக்கும் ஒரு திரைப்படமாக ‘நகல்’ இருந்தாலும், ரசிகர்களை உற்சாகப்படுத்த கூடிய எல்லா சிறப்பம்சங்களையும் நான் இந்த கதையில் உள்ளடக்கி இருக்கின்றேன்” என்கிறார் சுரேஷ்குமார்.