படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பும் ‘நாடோடிகள்-2’ படக்குழு..!

nadodigal 2 shedule wraps

சசிகுமார் நடிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் ‘நாடோடிகள்’. தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சமுத்திரகனி இயக்கி வருகிறார். இதில், முதல் பாகத்தில் நடித்த பரணி, இவர் தவிர அஞ்சலி, அதுல்யா ரவி ஆகியோரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக நாடோடிகள் 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் தயாரிப்பாளர் சங்கம் கடந்த மார்ச்-16 முதல் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாது என அறிவித்தது. வெளியூர்களில் நடைபெற்ற படப்பிடிப்புகளில் சில சங்கத்தின் அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தின.

அதில் ஒன்றுதான் ‘நாடோடிகள்-2’வும். இந்தநிலையில் இந்தப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சமுத்திரக்கனி அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து படக்குழுவினர் சென்னை திரும்புகின்றனர்.