நாளை படப்பிடிப்பு-தியேட்டர் காட்சிகள் ரத்து..!

nadigar-sangam

காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடக்கும் வன்முறைகளை கண்டித்தும், அதற்காக தமிழக விவசாயிகள் அறிவித்துள்ள மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழ் திரையுலகில் உலா அனைத்து சங்கங்களும் ஒன்று சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளன..

இதன்படி நாளை நடைபெறவிருக்கும் படப்பிடிப்புகள், எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெறாது என்றும், தியேட்டர்களில் காலை, நண்பகல் காட்சிகள் நடைபெறாது என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் எடுக்கும் முடிவுக்கு ஆதரவு கொடுப்போம் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.