நடிகர்சங்க டைரக்டரி மற்றும் இணையதளம் ; மார்ச்-20 பொதுக்குழுவில் வெளியீடு..!

Nadigar_sangam 1
வருகிற மார்ச்-20ஆம் தேதி தெனிந்திய நடிகர் சங்கத்தின் 62-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னை லயோலா கல்லுரி வளாகத்தில் நடிகர்சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறுகிறது. புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் இது என்பதால் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வசதியாக அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்துசெய்யப்படுகின்றன.

இந்த கூட்டத்தில் ‘நடிகபூபதி’ என அனைவராலும் அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிகர் அமரர், பி.யு.சின்னப்பா அவர்களுடைய குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்துதல், அவரது நுற்றாண்டு விழா வீடியோ மற்றும் நடிகர் சங்கம் செயல்பாடுகள் பற்றிய வீடியோ தொகுப்பும் திரையிடப்படும்.

அத்துடன் நடிகர் சங்கத்தின் டைரக்டரி வெளியீடு மற்றும் “இணையதளம்” வெளியீடும் நடைபெறும். மேலும், தங்களது வாழ்கையை நாடகத்துறைக்கு அர்ப்பணித்த பழம்பெரும் கலைஞர்களை கௌரவித்து சுவாமி சங்கரதாஸ் கலைஞர் விருது மற்றும் பொற்கிழியும் வழங்கப்படுகிறது.