நடிகர் சங்க பொதுக்குழு ஹைலைட்ஸ்..!

nadigar sangam 3

தமிழ்சினிமாவில் கேளிக்கை வரி பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.. மற்ற மாநிலங்களில் எல்லாம் அந்த மாநில அரசுகள் கேளிக்கை வரி பிரச்சனையை சுமூகமாக கையாண்டு வருகின்றன. ஆனால் தமிழகம் மட்டும் இப்போது வரிப்பிரச்சனையால் சிக்கி தவிக்கும் இந்த சூழிலில் நேற்று நடைபெற்ற நடிகர்சங்க பொதுக்குழுவில் சிவாஜி மணிமண்டபம், கேளிகைவரி, நடிகர் சங்க கட்டம் உள்ளிட்ட பல விஷயங்களில் தேர்மனான்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் நடிகர் சங்க தலைவர் நாசர் பேசுகையில்:

இது ஒரு முக்கியமான பொதுக்குழு எங்களுடைய மூன்றாண்டு கால நிர்வாகம் இந்த பொதுக்குழுவோடு நிறைவு பெறுகிறது. நிர்வாகத்தை கையில் எடுத்தபோது நினைத்ததை சொல்ல வேண்டும் என்ற ஒரு அடிப்படை உணர்வு இருந்தது அது மறுக்கப்பட்ட நிலையில் தீப்பிளம்ம்பாக இல்லாமல் ஒளிச்சுடராக மாறியது. இந்த மூன்றாண்டு காலத்தில் ஒரு நிலைக்கு நாம் எல்லோரும் வந்துவிட்டோம். எங்களுக்கு எதிரிகள் இருந்ததே கிடையாது அப்படி ஒரு வார்த்தை எங்கள் அகராதியில் இல்லை.கைகோர்த்து நின்றவர்கள் எதிர்த்தார்கள்.. வாழ்த்தியவர்கள் எதிர்ப்புரை வழங்கினார்கள் ஆனால் எதிர்ப்பவர்களை நாங்கள் மிகவும் மதிக்கிறோம் ஏனெனில் அவர்கள் எங்களை மறைமுகமாக பலமாக்கினார்கள். எப்படி எதிர்கொள்வது என ஆசிரியர்களாக நின்று கற்றுக்கொடுத்தனர்” என கூறினார்.

தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் பேசுகையில்:

எங்கள் நிர்வாகத்தில் நல்ல விஷயங்களை மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.எம்.ஜி.ஆர்.ஆர் ஆவியோ, சிவாஜி ஆவியோ கட்டிட நிலத்தில் புகுந்துவிட்டது. கட்டிடம் கட்ட முடியும் வரை போகாது. மறுபடியும் வழக்கு போட்டுப் போரடிக்காதீர்கள். வருகிறாயா. வா என்று நேர்மையுடன் நிற்கிறோம். என்றைக்குமே நேர்மை மட்டுமே ஜெயிக்கும். முதலில் பொதுச்செயலாளராக வருவேன் என்று தெரியாது.

மறுபடியும் இன்னொரு இடத்தையும் சுத்தப்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ஆனேன். ஆனால், முதலில் நடிகர் சங்கமே முக்கியம். இந்தக் கட்டிடம் அடுத்தாண்டு டிசம்பருக்குள் கட்டி முடிக்கப்படும். விரைவில் எம்.ஜி.ஆர் சமாதியை பார்த்துவிட்டு நடிகர் சங்கக் கட்டிடத்தைப் பார்க்க வருவது போன்ற ரீதியில் கட்டிடம் இருக்கும். அடுத்த தேர்தலிலும் நிற்போம். ஏனென்றால் கட்டிடத்தைப் பாதியில் விட்டுவிட்டுப் போகும் எண்ணமில்லை.

தமிழ் சினிமாவுக்குத் தமிழக அரசு 10% கேளிக்கை வரி விதித்திருக்கிறது. இந்தக் கேளிக்கை வரி எந்த மாநிலத்திலும் இல்லை. இந்தச் சினிமாத்துறையைச் சார்ந்தவர்கள் இதற்காகக் குரல் கொடுக்க வேண்டும். கேளிக்கை வரியை ரத்து செய்தால் தான் தமிழ் சினிமா நிலைக்கும். கேளிக்கை வரி, ஜிஎஸ்டி வரி, திருட்டு விசிடி என அனைத்து இடர்ப்பாடுகளுக்கு இடையே தமிழ் சினிமா செயல்பட்டு வருகிறது. கேளிக்கை வரியை ரத்து செய்யாவிட்டால் செயல்படவே முடியாது

என கூறினார். இந்த நிகழ்வில் தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பொன்வண்ணன் மற்றும் கருணாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.