நேற்று நடைபெற்ற நடிகர்சங்க பொதுக்குழுவில் முன்னணி நடிகர்கள், நடிகைககள் பலரும் வரவில்லை.. அந்தவகையில் நடிகை ஹன்ஷிகா சங்க கூட்டத்துக்கு வராவிட்டாலும் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு உணவு அளிக்கும் பொறுப்பையும் அதற்கான செலவையும் தானே ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதேபோல இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஆன செலவை ஒளிப்பதிவாளரும் ‘சதுரங்க வேட்டை’ நடிகருமான நட்டி ஏற்றுக்கொண்டார். இவர்களுக்கு சங்க கூட்டத்தில் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.