‘நானும் ரௌடி தான்’ படத்தை கைப்பற்றிய லைக்கா..!

கத்தி படத்தை தயாரித்ததன் மூலம் மிகுந்த சர்ச்சைகளுக்கு இடையே தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த லைக்கா நிறுவனம், மீண்டும் அடுத்த பட தயாரிப்பில் இறங்குவதற்கு முன் தன்னை தமிழ்சினிமாவில் நன்கு ஸ்திரப்படுத்திக்கொள்ளும் விதமாக தனுஷுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறது.

அதாவது தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘நானும் ரௌடி தான்’ படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமையை கைப்பற்றியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்தப்படம் வரும் அக்டோபர்-2ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.