ஒருதலை காதல் கொலைகளை மையப்படுத்தி பெண் இயக்குனர் உருவாக்கிய நான்காம் விதி

naankam vithi

தனக்கு கிடைக்காதது அடுத்தவனுக்குக் கிடைக்கக் கூடாது என்று ஒருவர் நினைத்தாரேயானால் அது தோல்வி என்கிற ஒன்றாக மட்டுமே இருக்கவேண்டும்.. ஆனால் இன்றோ அப்படிப்பட்ட சில நல்ல உள்ளங்களுக்கு மத்தியில் தனக்கு கிடைக்காத காதலி அடுத்தவனுக்குக் கிடைக்கக் கூடாது என எண்ணும் சில இளைஞர்களின் தீய எண்ணத்தை தான் இயக்கியுள்ள நான்காம் விதி குறும்படம் மூலம் தீ வைத்து கொளுத்தி உள்ளார் இயக்குனர் அனு சத்யா.

காதல் என்பது விட்டுக்கொடுத்தல்.. சில நேரங்களில் காதலையே விட்டுக் கொடுத்தல் என்ற கருத்தை இதில் ஆணித்தரமாகக் கூறியுள்ளார் இயக்குனர் அனு சத்யா. இந்த குறும்படத்தில் நடித்த நடிகர்களில் உளவியல் மருத்துவராக நடித்த நடன இயக்குனர் உட்பட அனைவருமே தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

காதலியை கொல்வதை ஒரு கொலை முயற்சியாக மட்டுமே செய்யாமல் அதை உளவியல்ரீதியாக அணுகிய இயக்குனர் அனு சத்யா நிச்சயம் பாராட்டுக்குரியவர். இந்த குறும்படத்தை திரையுலகில் உள்ள பிரபலங்களான வரலட்சுமி, அமலாபால், விஜய்சேதுபதி, இயக்குனர்கள் ராஜூமுருகன் விக்னேஷ் சிவன், அருண்ராஜா காமராஜ், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் உட்பட பலர் பாராட்டியுள்ளனர்