‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு ‘U/A’ சான்றிதழ்..! ஏப்ரல்-11ல் ரிலீஸ்..!!

‘பாண்டியநாடு’ படத்தின் வெற்றி பல பாடங்களையும் சில சூட்சுமங்களையும் விஷாலுக்கு கற்றுக்கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அதனால் ஒரு ரசிகன் தனது படங்கள் எந்தவிதத்தில் இருந்தால் திருப்தியடைவான் என்கிற சக்சஸ் ஃபார்முலாவை மனதில் கொண்டு ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் தனது முழு உழைப்பையும் கொட்டியிருக்கிறார் விஷால்.

திருவின் விறு விறு இயக்கம், லட்சுமி மேனனின் துறுதுறு நடிப்பு, ஜீ.வி.பிரகாஷின் சுறு சுறு இசை என அனைத்தும் இதில் கச்சிதமாக கலக்கப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

2மணி 29 நிமிடம் ஓடும் படமாக உருவாகியுள்ள இந்தப்படம் ஏப்ரல்-11ஆம் தேதி வெளியாகிறது