நாய் சேகர் தெரியும்.. நாய் சிபி யார்னு தெரியுமா..?

‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் சிபிராஜுக்கு இணையான கதாபாத்திரத்தில் இத்தோ என்கிற நாய் ஒன்றும் நடித்திருக்கிறது. இதனை தேடிக்கண்டுபிடித்த கதையைப்பற்றி பத்திரிகையாளர்களிடம் சுவராஸ்யமாக பகிர்ந்துகொண்டார் படத்தின் நாயகனான சிபிராஜ்.

“சின்னவயசுல இருந்து எனக்கு நாய்கள் மேல உயிரு.. பள்ளிக்கூடத்துலேயே என்னை ‘நாய் சிபி’ன்னு தான் கூப்பிடுவாங்கன்னா பாத்துக்குங்க.. இப்படி ஒரு படம் பண்ணாலாம்ணு முடிவெடுத்து ஒரு நாய் வேணும்னு டிவிட்டர்ல தகவல் போட்டிருந்தேன்.. அதைப்பார்த்த வெங்கட் பிரபு சார், அதை ரீட்வீட் பண்ண, அது மூலமா பெங்களூர்ல இருந்து இவனை புடிச்சுட்டு வந்தோம்..

இந்த நாய்க்கு கொடுத்த பயிற்சிகளை வீடியோவா மாத்தி, அதை பிராணிகள் நல அமைப்புல காட்டி, நாங்க நாயை துன்புறுத்தலை அப்படின்னு அவங்களுக்கு விளக்கி, அதுக்கப்புறமா அவங்ககிட்ட அனுமதி வாங்கித்தான் இந்தப்படத்தோட படப்பிடிப்பையே நடத்தியிருக்கோம்..” என ஒரே நாய்புராணமாக பாடினர் சிபிராஜ்.