5௦வது நாளை தொட்டது ‘நாய்கள் ஜாக்கிரதை’..!

 

கடந்தவருடத்தில் வெளியாகி ஐம்பது நாட்களை தொட்ட படங்களை சட்டென விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு மிகச்சிறிய அளவிலான பட்டியலில், சிபிராஜ் நடித்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் இடம்பிடித்ததோடு இன்று வெற்றிகரமாக 5௦வது நாளை தொட்டு ஓடிக்கொண்டு இருக்கிறது.

ஜஸ்ட் பாஸ் என்கிற லெவலை எல்லாம் அசால்ட்டாக தாண்டி, சிபிராஜ் சூப்பர் டிஸ்டிங்கஷன் வாங்க காரணமாக இருந்ததது, குடும்பங்களையும் குறிப்பாக குழந்தைகளையும் தியேட்டருக்கு வரவழைக்கும் நோக்கில் அவர் குறிவைத்து படத்தை எடுத்ததால் தான்.. நடித்ததால் தான்.

சிபிராஜே எதிர்பார்க்காத வசூல் மழை, பெரிய தொகைக்கு கேட்கப்படும் மற்ற மொழிகளின் ரீமேக் ரைட்ஸ் என இந்த வெற்றி அவருக்கு இன்னும் மூன்று வருடத்திற்கு தாங்கும்.. அதற்குள் அவர் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக்கொள்ளும் விதமான கதைகளில் தொடர்ந்து நடிக்கவேண்டும்.. சிபி & குழுவினருக்கு  வாழ்த்துக்கள்.