5௦ நாட்களை தாண்டிய நாச்சியார்-கலகலப்பு-2..!

50 days films

தமிழ் சினிமாவில் தற்போது கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக புதிய தமிழ்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதனால் ஸ்ட்ரைக் ஆரம்பிப்பதற்கு முன்பு வெளியான படங்களில் மிகவும் நல்ல படங்கள் மட்டும் இப்போதும் தொடர்ந்து தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கின்றன.

அந்தவகையில் பாலா இயக்கத்தில் ஜோதிகா-ஜி.வி.பிரகாஷ் நடித்த நாச்சியார் படமும் சுந்தர்.சியின் ‘கலகலப்பு-2’ படமும் தற்போது ஐம்பதாவது நாட்களை தாண்டி ஓடிக்கொண்டு இருக்கின்றன. இந்த இரண்டு படங்களும் ரிலீசான சமயத்தில் ஓரளவு வரவேற்பை பெற்றன என்பது உண்மை..

ஆனால் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தால், இட நெருக்கடி காரணமாக ரிலீசான மூன்று வாரங்களிலேயே இந்த படங்கள் தியேட்ட்ரை விட்டு தூக்கப்பட்டு இருக்கும்.. ஆனால் நடந்துவரும் ஸ்ட்ரைக், இந்தப்படங்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்பதே உண்மை.