“என்னுடைய பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்” ; விஜய்சேதுபதி..!

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை தொடர்ந்து இயக்குனர் கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள படம் ‘ஜூங்கா’.. மிகவும் வித்தியாசமான வேடத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள இந்தப்படத்தில் சாயிஷா சைகல், மடோனா செபாஸ்டியன் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ‘மேயாத மான்’ புகழ் பிரியா பவானி சங்கர் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்..

அருண்பாண்டியன் இந்தப்படத்தை தயாரித்துள்ளார். சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. விழா மேடையில் டீக்கடை பெஞ்ச் போல செட்டப் செய்து அதில் படக்குழுவினர்களை அமர வைத்தது வித்தியாசமாக இருந்தது. நிகச்ழ்சியை மாகாபாவும் பிரியங்காவும் தொகுத்து வழங்கினார்கள்.

‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ போல இந்தப்படத்தில் எதுவும் பஞ்ச் டயலாக் இருக்கிறதா என இந்த விழாவில் விஜய்சேதுபதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ரொம்பவே கூலாக, “எனக்கென பஞ்ச் டயலாக் எதுவும் எழுதப்படுவதில்லை. என்னுடைய படங்களில் இடம் பெறும் வசனங்களில் ரசிகர்களுக்கு எது பிடித்துப்போகிறதோ அது தான் பஞ்ச் டயலாக் என நான் நினைக்கிறேன்” என பதில் கூறி ரசிகர்களின் கைதட்டலை அள்ளினார் விஜய்சேதுபதி .

இந்தப்படத்தில் விஜய்சேதுபதி வித்தியாசமான டான் ஆக நடித்துள்ளார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் பார்ட்-2 போல இருக்கிறதே என இயக்குனர் கோகுலிடம் கேட்ட போது, அந்தப்படத்தையே மிக பிரமாண்டமாக எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்.. அதுதான் இந்த ஜூங்கா திரைப்படம் என பதிலளித்தார் இயக்குனர் கோகுல் .