இசையமைப்பாளர் ஷாம் சி.எஸ்.க்கு பிரபுதேவா சவால்

lakshmi

தேவி படத்தை தொடர்ந்து பிரபுதேவாவும் இயக்குனர் விஜய்யும் இணைந்துள்ள படம் லட்சுமி. இந்த படம் பிரத்யேகமாக நடனத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் நடனத்தை மட்டுமே சுவாசிக்கும் குருவுக்கும் நடனத்தை சுவாசிக்க துடிக்கும் சிஷ்யைக்கும் இடையேயான உண்மையான பிணைப்பை காட்டும் படம் தான் இது.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். பேபி டித்யா சூப்பர் சென்சேஷனல் சிஷ்யையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் ஷாம் சி.எஸ்ஸிற்கு இந்த படத்தில் பெரிய சவாலை கொடுத்திருக்கிறார் பிரபுதேவா. இருந்தாலும் பிரபுதேவாவின் நடனத்திற்கு ஏற்றவாறு இசையமைத்திருக்கிறார் ஷாம் சி.எஸ்