இசையமைப்பாளர் ஆதித்யன் காலமானார்..!

adithyan

நடிகர் கார்த்திக் நடித்த ‘அமரன்” படத்தில் ‘வெத்தல போட்டேன் ஷோக்குலே’, சீவலப்பேரி பாண்டி படத்தில் ‘ஒயிலா பாடும் பாட்டுல’ என தொண்ணூறுகளில் சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் ஆதித்யன்..

நாளைய செய்தி, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன், அசுரன், மாமன் மகள், சூப்பர் குடும்பம் கடைசியாக கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார்

63 வயதான இவர் சிறுநீரக கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் ஒருவாரமாக சிகிச்சைபெற்றுவந்தார். நேற்று மதியம் 11-மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு] ஷோபியா என்கிற மனைவியும் ஷரோன், பிராத்தனா என்கிற இரண்டு மகள்களும் உள்ளனர். இருவரும் திருமணமாகி ஹைதராபாத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

இவரது உடல் நாளை ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு எடுத்துவரப்படும் .நாளை மதியம் இறுதி சடங்கு நடைபெறும் .