மீண்டும் இந்தியில் படம் இயக்க ஏ.ஆர்.முருகதாஸ் செல்வதை ஆச்சர்யமாக பார்க்கவேண்டாம். ‘விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை இயக்கும்போதே, அவர் சோனாக்சி சின்ஹாவை வைத்து இந்தியில் தனது அடுத்த படத்தை இயக்கப்போகிறார் என்பது சொல்லப்பட்ட விஷயம் தானே..? இதோ நாளை மறுநாள் (மார்ச்-14) அதன் படப்பிடிப்பை துவங்குகிறார் முருகதாஸ்.
படத்தின் கதாநாயகி சோனாக்சி சின்ஹா என்பதுதான் தெரியுமே..? இதில் சர்ப்ரைஸாக அவரது தந்தை சத்ருகன் சின்ஹாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதுமட்டுமல்ல, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பும் வில்லனாக நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப்படம் தமிழில் ஸ்லீப்பர் ஹிட் என்று சொல்லப்பட்ட ‘மௌனகுரு’ படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் தான்.