முப்பரிமாணம் படத்தை சிருஷ்டி அதிகம் எதிர்பார்ப்பது ஏன்..?

mupparimanam 1

வளர்ந்து வரும் நடிகை சிருஷ்டி டாங்கேவின் திரையுலக பயணத்தை தர்மதுரைக்கு முன் தர்மதுரைக்குப்பின் என இரண்டாக பிரிக்கலாம்.. காரணம் தர்மதுரைக்கு முன் நடித்த படங்களில் தனது கன்னக்குழி அழகால் கவனம் ஈர்த்த சிருஷ்டி, தர்மதுரையில் தனது நடிப்பாற்றலையும் நன்றாக வெளிப்படுத்தினார்..

அடுத்ததாக சிருஷ்டி எதிர்பார்த்து கொண்டிருப்பது தான் நடித்துள்ள ‘முப்பரிமாணம்’ படத்தின் ரிலீசைத்தான்.. காரணம் மற்ற படங்களைப்போல இல்லாமல் இந்தப்படத்தின் படப்பிடிப்பே சிருஷ்டிக்கு இந்தப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என்பதை குறிப்பால் உணர்த்திவிட்டதாம்… ஆம்.. இதுவரை துறுதுறுவென கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிருஷ்டி டாங்கே, இப்படத்தில் பெரிய நடிகைகள் செய்ய வேண்டிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

இத்தனைக்கும் இந்தப்படத்தின் பாதியிலேயே விலகலாம் என நினைத்தவர்தான் சிருஷ்டி.. காரணம் ஷூட்டிங்ஸ்பாட்டில் படத்தின் டைரக்டர் அதிரூபன் காட்டிய கெடுபிடிகள் தான்.. ஆனால் அனைத்தும் படத்தின் நன்மைக்கே என தெரிந்ததும் முழு ஒத்துழைப்பையும் கொடுத்து நடித்ததாக சிருஷ்டியே கூறியுள்ளார்.

படத்தின் கதாநாயகன் சாந்தனு.. படத்தை இயக்கியுள்ள இயக்குனர் அதிரூபன் இயக்குனர் பாலாவிடம் தொழில் கற்றவர்.. நடிப்பில் பிசியாகிப்போன ஜி.வி.பிரகாஷ் நேரம் ஒதுக்கி இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்றால் அதற்கு இந்தப்படத்தின் கதைதான் காரணமாம்.. அதுவும் வேறு படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் விதமாக வரும் மார்ச்-3ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக இருக்கிறது.