ரூட்டை மாற்றிய ‘முண்டாசுப்பட்டி’ இயக்குனர்..!

mundasupatti ramkumar
விஷ்ணு, காளி வெங்கட், நந்திதா, முனீஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வெளியான ‘முண்டாசுப்பட்டி’யை மறந்திருக்க மாட்டீர்கள் தானே.. எப்படி முடியும்..? போட்டோ எடுத்தால் இறந்துவிடுவோம் என்கிற ஒரு கிராமத்து மக்களின் மூட நம்பிக்கையை வைத்து விலா நோக சிரிக்கவைத்து கதை சொல்லியிருந்தார் இயக்குனர் ராம்குமார்..

வெற்றிபடம் கொடுத்தாலும் கூட, அடுத்த பட கதை உருவாக்கத்திற்கு கொஞ்சம் அதிக்கபடியான கால அவகாசம் எடுத்துக்கொண்ட ராம்குமார், அடுத்து இயக்க இருப்பது க்ரைம் திரில்லர் கதையாம். இதனை இயக்குனர் ராம்குமாரே அறிவித்துள்ளதோடு படத்தின் வேலைகளையும் ஆரம்பித்துவிட்டாராம்.