மீண்டும் சி.வி.குமாருக்கே படம் இயக்கும் ‘முண்டாசுப்பட்டி’ இயக்குனர்..!

Mundasupatti Director Again Direct With CV Kumar

இரண்டு மணி நேரம் வயிறு குலுங்க குலுங்க சிரிக்கும்படி படம் எடுக்க முடியுமா? கடந்த வருடம் திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெளியான ‘முண்டாசுப்பட்டி’ படத்தை பார்த்தபோது முடியும் என்றே சொல்லத் தோன்றியது. போட்டோ எடுத்தால் இறந்துவிடுவோம் என்கிற மூடநம்பிக்கையை வைத்து இரண்டுமணி நேர அலுப்பிலாத படத்தை தந்தார் அறிமுக இயக்குனர் ராம்குமார்..

இப்போது தனது படத்தை இயக்குவதற்கு தயாராகிவிட்டார் ராம்குமார். அவருக்கு முதல் பட வாய்ப்பு தனது வெற்றிபெறச்செய்த சி.வி.குமார் தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என்று தெரிகிறது.