கடந்த வருடம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெறத் தவறியது அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகி அவரும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்த கனா படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல பெயரை அவருக்கு பெற்று தந்தது.
தற்போது அவரது அடுத்த படமாக ‘மிஸ்டர் லோக்கல்’ உருவாகி வருகிறது ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை கலக்கலான காமெடி படங்களுக்கு பெயர் போன ராஜேஷ்.எம் இயக்குகிறார்
இயக்குனரும் ஹீரோவும் காமெடிக்கு பெயர் போனவர்கள் என்பதால் இந்த படத்தில் நகைச்சுவை காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது என உறுதியாக கூறலாம். இந்தப்படம் வரும் மே-1ஆம் தேதி மேதின வெளியீடாக ரிலீசாகிறது