‘மிஸ்டர் சந்திரமௌலி’ ; தனஞ்செயன் அப்டேட்ஸ்..!

mr chandramouli updates

திரு இயக்கத்தில் கார்த்திக், கவுதம் கார்த்திக், வரலக்ஷ்மி சரத்குமார், ரெஜினா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. போப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பில் இந்தப்படத்தை தயாரித்துள்ள தனஞ்செயன், இந்தப்படத்தின் தற்போதைய நிலவரம் பற்றி அப்டேட்ஸ் செய்துள்ளார்.

“படத்தின் எல்லா கட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டது. படத்திலுள்ள நான்கு பாடல்களில் இரண்டு பாடல்கள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள இரண்டு பாடல்களை படமாக்க படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர். கிராபியில் காதல் பாடலையும், பேங்காக்கில் ஒரு பப் பாடலையும் படமாக்கியுள்ளனர். எங்கள் படக்குழுவினரின் சுறுசுறுப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கிருந்தவர்கள் கண்டு வியந்துள்ளனர்.

படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகளை உடனே துவங்கி கூடிய விரைவில் படத்தை ரிலீசுக்கு தயாராக்கவுள்ளோம். இந்தப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் வாங்கியுள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் நடைபெறும். இந்த படத்தை மே மதம் முதல் வாரம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இது தமிழ் ரசிகர்களுக்கு ஒரு கோடை விடுமுறை விருந்தாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்” என கூறியுள்ளார்..

சாம் சி.எஸ் இசையில், ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பில், ஜக்கியின் கலை இயக்கத்தில் மிஸ்டர் சந்திரமௌலி’ உருவாகி வருகிறது. நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், சதிஷ், விஜி சந்திரசேகர், ஜகன் மற்றும் ‘மைம்’ கோபி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.