நவ-21ல் ‘மொசக்குட்டி’ ரிலீஸ்..!

மெகாஹிட் படமான ‘மைனா’ மற்றும் சமுதாய சீர்திருத்தங்களை உள்ளடக்கிய ‘சாட்டை’ போன்ற படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள படம் தான் ‘மொசக்குட்டி’. இந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார்.

முக்கிய வேடங்களில் பசுபதி, ஜோமல்லூரி, சென்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.. இதில் ‘உப்புதர காசி’ என்ற கதாபாத்திரத்தில் பசுபதியும் ‘விருமாண்டி’ என்னும் கதாபாத்திரத்தில் ஜோமல்லூரியும் நடித்திருக்கிறார்கள்.

படத்தை இயக்குனர் ஜீவன் இயக்கியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவு அவரது தம்பி சுகுமார் தான். கடந்த அக்-2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்றே படத்தை வெளியிட தீர்மானித்திருந்தார்கள்.. சில காரணங்களால் அது தள்ளிப்போகவே, இப்போது வரும் நவ-21ஆம் தேதி படம் ரிலீஸாவது உறுதியாகியுள்ளது.