குழந்தைகளை கவரும் விதமாக உருவாகும் மங்கி டாங்கி..!

monkey donkey (1)
ஒரு சில தலைப்புகளே மனதை உடனடியாக கவரும் . குறிப்பாக குழந்தைகள் தங்களுக்குள் விளையாடி மகிழும் போதும், கோபித்துக் கொள்ளும் போதும் “monkey donkey” என்னும் வார்த்தைகள் குழந்தைகள் மத்தியில் பிரபலம். தற்காலத்தில் குழந்தைகளைவிட, உணர்வற்ற பணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர்களே அதிகம். “Monkey donkey” கதைகளமும், அத்தைகய பெற்றோருக்கும் குழந்தைக்கும் இருக்கும் உணர்வை பற்றி கூறும் படம்.

“குழந்தை வளர்ப்பில்” அதிக கவனம் தேவை என்னும் கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தை அபி ஆனந்த் மற்றும் சலீஷ் சுப்ரமணியம் இணைந்து இயக்குகின்றனர். ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை தயாரிக்கிறார்.

“இயந்திரமயமான இக்காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய சவால். தற்கால குழந்தைகள் பெற்றோர்களின் அன்புக்காகவும் நேரத்திற்காகவும் ஏங்குகிறார்கள். அன்புக்கு எங்கும் குழந்தையை , இருவர் கடத்தினால் என்ன ஆகும் என்னும் சுவாரசியமான களத்தில் ஹாலிவுட் திரைப்படம் “baby’s day out” பாணியில், பயணிக்கும் திரைப்படமே இது.

இயக்குனர்கள் அபி ஆனந்த் மற்றும் சலீஷ் சுப்ரமணியம் கதையை கூறியபொழுதுக்கு என்னால் எளிதாக கதையின் ஒட்டதோடும் , கதாபாத்திரங்களோடும்இணைத்து கொள்ளமுடிந்தது. அதுவே என்னை படத்தை தொடங்குவதற்கான உத்வேகத்தையும் கொடுத்தது. இப்படம் அனைத்து மக்களும் ரசிக்கும் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமில்லை” என்றார் தயாரிப்பாளர் ஹஷீர்.

“Monkey donkey” திரைப்படத்தில் நடிகர்கள் ஸ்ரீராம் ,கிஷோர் ,பேபி யுவினா,யோஜ்ஜைபீ மற்றும் வந்தனா இணைந்து நடிக்கிறார்கள். சூரஜ் குரூப் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு, கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ரிசல் ஜைனி படத்தொகுப்பில், சங்கீத் பாடல்களை எழுதுகிறார்.

தேனீயின் இயற்கை கொஞ்சும் பகுதியில் “monkey donkey” படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.