தமிழில் வெளியாகும் மோகன்லாலின் லூசிஃபர்

சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் லூசிபர் என்கிற படம் வெளியானது. நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தை இயக்கியதன் மூலம் ஒரு இயக்குனராகவும் தன்னை மாற்றிக்கொண்டார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ள இந்த படம் வரும் மே 3ஆம் தேதி தமிழிலும் வெளியாக இருக்கிறது.

இந்தப்படம் அரசியல் கதைக்களத்தை கொண்டுள்ளது என்பதும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடந்த அரசியல் நிகழ்வுகள் இந்த படத்தின் கதையுடன் ஒத்துப்போவதாகவும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான மோகன்லால், ஜான்விஜய், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ், பிரித்விராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் இருப்பதால் இந்தப் படத்தை தமிழில் ரிலீஸ் செய்கிறார்களாம்.