மோகன்லால் படத்தில் நடிக்கிறார் சிருஷ்டி டாங்கே..!

srushti dange

தற்போது தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வரும் நடிகை சிருஷ்டி டான்கேவுக்கு முதன்முதலாக மலையாளப்படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.. அதுவும் மோகன்லால் படத்தில்.. ஆமம் பிரபல மலையாள இயக்குனர் மேஜர் ரவி இயக்கிவரும் ‘1971-பியாண்ட் தி பார்டர்ஸ்’ என்கிற படத்தில் தான் இவர் நடித்து வருகிறார்.

ஆனாலும் இவர் கதாநாயகியாக நடிப்பது மோகன்லாலுக்கு அல்ல. ‘கெளரவம்’ படத்தில் கதாநாயகனாக நடித்தாரே அல்லு சிரிஷ், அவருக்குத்தான் ஜோடியாக நடிக்கிறாராம். அல்லு சிரிஷ் ராணுவ கமாண்டோவாக நடிக்க, சிருஷ்டி டாங்கே கிராமத்து பெண்ணாக நடிக்கிறாராம்.