மோகன்லால் படத்தின் மூலம் இயக்குனரான பிருத்விராஜ்

lucifer

மலையாள சினிமாவின் இளம் நடிகர்களுக்கும் சீனியர் நடிகர்களுக்கும் இடைப்பட்ட பிரிவில் இருப்பவர் நடிகர் பிரித்விராஜ். கிட்டத்தட்ட நூறு படங்களில் நடித்துவிட்ட இவர், முதன்முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்து நடிகர் மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். அரசியல் திரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் மோகன்லாலுடன் மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், மற்றும் முக்கிய வேடங்களில் இயக்குனர் பாசில், மாரி 2 புகழ் டோவினோ தாமஸ், இந்திரஜித், ஜான் விஜய், சுரேஷ் மேனன், கலாபவன் சாஜன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

நடிகர், திரைக்கதை ஆசிரியர், பாடகரான முரளி கோபி அவர்கள் இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். புலிமுருகன் படத்திற்கு வசனம் எழுதிய R P பாலு இந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் சாதுமிரண்டா படத்திற்கு இசையமைத்த தீபக் தேவ் இப்படத்திற்கு இசையமைக்க, சம்ஜித் முஹமது படத்தொகுப்பினை மேற்கொள்கிறார். கலை இயக்கம் மோகன் தாஸ், சண்டைப்பயிற்சி ஸ்டண்ட் சில்வா, நடனம் தினேஷ்.

இத்திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள அரசியல் கலந்த த்ரில்லர் படம். இந்திய அரசியல் படமாக இருக்கும் இது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் அரசியல் தொடர்புகளை இப்படம் பேச இருக்கிறது.இப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம். கொச்சின், மும்பை, லட்சதீவு, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது .