பூஜையுடன் மோகன்தாஸ் படப்பிடிப்பு தொடக்கம்

காமெட், த்ரில்லர் எதுவானாலும் ரசிகர்கள் தன்னிடம் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டவர் விஷ்ணு விஷால். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் மற்றும் ராட்சசன் என சமீபத்திய இரண்டு உதாரணங்களே அதற்கு சாட்சி. அந்தவகையில் தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து ‘மோகன்தாஸ்’ என்கிற த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன் பூர்ணிமா பாக்யராஜ், கருணாகரன், அக்‌ஷய் ராதாகிருஷ்ணன், ஷாரிக், லாலு, பிரகாஷ் ராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்தப்படத்தை ‘களவு’ படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்கவுள்ளார்.

இந்தப்படத்தின் பூஜை சென்னையில் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்தப் படம் ஒரு எமோஷனல் த்ரில்லர் பாணியிலான கதையாகும். பார்வையாளர்களுக்குக் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்கிறது படக்குழு அதற்கேற்றாற்போல் கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே வெளியான இந்தப்படத்தின் அறிமுக டீஸர் இந்தப்படத்தில் ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கிறது என்பதை உணர்த்தியது…