கமல் படத்தில் மோகன்லால் மகன்..!

மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் முன்னணி ஹீரோவாக மலையாள திரையுலகில் அழுத்தமாக காலூன்றிவிட்டாரே, அப்படி என்றால் மோகன்லாலின் மகனும் நடிப்புத்துறையில் இறங்கத்தானே வேண்டும் என பலர் பந்தயம் கட்டிகொண்டு இருந்தார்கள். ஆனால் மோகன்லாலோ தனது மகனுக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று அப்போதே சொல்லிவிட்டார்..

நடிப்பதில் தானே ஆர்வம் இல்லை.. உதவி இயக்குனர் ஆகமாட்டார் என்று அவர் சொல்லவிலையே.. எஸ்.. இப்போது உதவி இயக்குனராக வேலை பார்க்கிறார் மோகன்லாலின் மகன் பிரணவ்.. அதுவும் தமிழ்ப்படத்தில்.. இன்னும் குறிப்பாக கமல் நடித்துவரும் ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தில் ஜித்து ஜோசப்பிற்கு உதவி இயக்குனராக..

மகனின் ஆர்வம் டைரக்ஷனில் தான் என்பது தெரிந்ததும் உடனே ஓகே சொன்ன மோகன்லால், தனக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் ஜித்து ஜோசப்பிடமே தொழில் கற்றுக்கொள்ள சொல்லிவிட்டார்.. மேலும் தமிழ்ப்படத்தில் வேலைபார்ப்பதால் “என் மகனை நன்கு கவனித்துக்கொள்ள ‘உன்னைப்போல் ஒருவன்’ உண்டோ” என தனது நண்பர் கமல் வசம் ஒப்படைத்தும் விட்டார். நடிகரின் மகன் நடிகராகத்தான் வேண்டுமா என்ன..?