“மிலிட்டிரி கேம்ப்பும் டைரக்டர் ஹரியின் யூனிட்டும் ஒண்ணுதான்” – சத்யராஜ்

 

அது என்னவோ தெரியவில்லை கடந்த ஒரு வருஷமாக சத்யராஜுக்கு அமையும் படங்களும் அதில் அவரது கதாபாத்திரமும் அவருக்கேற்ற மாதிரி கச்சிதமாக அமைந்து அவரை சந்தோஷப்படுத்தி விடுகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜாராணி, தலைவா, சிகரம் தொடு என இந்த பட்டியலை பார்க்கும்போதே அது தெளிவாக தெரியும். தற்போது ஹரி டைரக்ஷனில் முதன் முறையாக ‘பூஜை’ படத்தில் நடித்திருக்கிறார்.. மொட்டத்தலை கெட்டப்புடன் போலீஸ் அதிகாரி வேடம்..

“ஹரி படத்தில் நடிப்பது மிகச்சிறந்த அனுபவம். அதே சமயம் அவர் படங்களில் நடிப்பவர்களும் சரி, அவர் படத்தை தயாரிப்பவர்களும் சரி.. அவர் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும். மொத்தத்தில் அவர் பட ஷூட்டிங் ஸ்பாட்டே மிலிட்டிரி கேம்ப் மாதிரித்தான் இருக்கும்.. ஆனால் என்னைப்போன்ற நடிகனுக்கு அப்படி இருப்பது தான் பிடிக்கும்” என இந்தப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி சொல்கிறார் சத்யராஜ்.