ஜூலை-8ல் ‘மிக மிக அவசரம்’ டீசர் வெளியீடு..!

mika mika avasaram teaser release

அமைதிப்படை 2, கங்காரு ஆகிய படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இந்தப்படங்களில் கிடைத்த அனுபவங்களை கொண்டு ‘மிக மிக அவசரம்’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘கங்காரு’ பட நாயகி ஸ்ரீப்ரியங்கா தான் இதிலும் நாயகியாக நடித்துள்ளார். இந்தப்படம் பெண் காவலர்களின் அவலங்களைச் சொல்லும் படமாக உருவாக்கி இருக்கிறது.

மிக மிக அவசரம் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஏப்ரலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸால் ட்விட்டரில் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்த சில நாட்களிலேயே அந்தப் படத்தின் முதல் மோஷன் போஸ்டரை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்.

நாளை மறுதினம் (ஜூலை-8) இந்தப்படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. இதனை இயக்குனர் சேரன் வெளியிடுகிறார்.