மேயாத மானை கட்டவிழ்த்து விட்ட தனுஷ்..!

meyatha maan teaser

ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை கடந்த 2014ல் தொடங்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், அதன்மூலம் முதன்முதலாக தயாரித்துள்ள படம் தான் ‘மேயாத மான்’. இந்தப் படத்தில் வைபவ் மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளனர். விக்ரம் வேதா, பீச்சாங்கை படங்களின் மூலம் கவனித்தக்க நடிகராக மாறியுள்ள விவேக் பிரசன்னா முக்கிய வேடத்தில் மதித்துள்ளார்.

இந்தப்படத்தில் இதயம் முரளி என்கிற கேரக்டரில் நடித்துள்ளார் வைப். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் குறும்பட இயக்குனராக புகழ்பெற்ற இரத்தின குமார் என்பவர் தனது ஹிட்டான குறும்படத்தையே பெரும்படமாக இயக்கியுள்ளார்.. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் இன்று மாலை வெளியிட்டார். கார்த்திக் சுப்புராஜ் டைரக்சனில் விரைவில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.