பிறந்தநாள் பரிசு கொடுத்து ரசிகர்களை ‘மெர்சல்’ ஆக்கிய விஜய்..!

mersal 1

விஜய் வழக்கமாக தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு கொடுக்கும் பரிசு என்னவாக இருக்கும்..? தனது புதிய பட அறிவிப்பு, அல்லது நடித்துக்கொண்டு இருக்கும் படத்தின் ட்ரெய்லர், டீசர் என தனது படம் சம்பந்தப்பட்ட ஒன்றை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவார்.. இப்போதும் தனது பிறந்தநாள் பரிசாக தற்போது நடித்துவரும் படத்தின் டைட்டிலை ‘மெர்சல்’ என அறிவித்து ரசிகர்களை மெர்சல் ஆக்கியுள்ளார்..

‘தெறி’ படத்தை தொடர்ந்து அட்லீயுடன் இரண்டாவது முறையாக விஜய் இணைந்துள்ள இந்தப்படம் விஜய் நடிக்கும் 61வது படமாகும்.. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர்.. அதற்கேற்றார்போல விஜய்யும் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.