மெர்சல் டீசருக்கு பலத்த வரவேற்பு..!

mersal teaser

வரும் தீபாவளிக்கு விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ திரைக்கு வர உள்ளது.. இந்நிலையில் மெர்சல் படத்தின் டீசர் வெளியானது. வெளியான 3 மணி நேரத்தில் 6 லட்சம் லைக்குகளை தாண்டி சாதனை படைத்துள்ளதுடீசர் வெளியாகும் முன்பிருந்தே ஆர்வமுடன் காத்திருந்த ரசிகர்கள் டுவிட்டரில் மெர்சர் டீசர் என்ற வார்த்தையை இந்திய அளவில் முதலிடத்தில் டிரண்ட் செய்தனர்.

இந்தப்படத்தில் விஜய் மூன்று கேரக்டர்களில் நடிக்கிறார். அதேபோல சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இந்தப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ள நிலையில் இந்த டீசரும் வரவேற்பை பெற்று வருகிறது.