மெர்சல் முதல்நாள் முதல் காட்சி ; நெல்லை ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!

mersal fdfs treet

வரும் தீபாவளி விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் தீபாவளியாக இருக்கப்போகிறது. அட்லீ இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜய் நடித்துள்ள இந்தப்படத்தின் டைட்டில் பிரச்சனையெல்லாம் சுமூகமாக முடிந்து, அக்-18ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்தப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தின் முதல்நாள் முதல் காட்சிக்காக இப்போதிருந்தே ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.. இதில் நெல்லை முத்துராம் தியேட்டர் நிர்வாக, முதல்நாள் முதல் காட்சியின்போது ‘ஆளப்போறான் தமிழன், மெர்சல் அரசன் ஆகிய இரண்டு பாடல்களையும் இரண்டுமுறை திரையிட்டு காட்ட முடிவுசெய்து அதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளார்கள். நெல்லை விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் இது டபுள் ட்ரீட்டாக இருக்கும்.