ஜப்பானில் முதன்முறையாக ‘மெர்சல்’ சாதித்த இரண்டு விஷயங்கள்..!

mersal in japan

அட்லீ டைரக்சனில் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் வரும் அக்-18, தீபாவளி ரிலீஸாக திரைக்கு வர இருக்கிறது. உலகெங்கிலும் ரிலீஸாகவுள்ள இந்தப்படம் ஜப்பானிலும் ரிலீசாகும் அதேவேளையில் முதன்முதலாக நாகே இரண்டு விஷயங்களை சாதித்துள்ளது.

ஜப்பானில் பிரைடே ஈவினிங் ஷோ ரொம்பவே பிரபலம்.. பெரும்பாலும் ஹாலிவுட் படங்கள், ஜப்பானிய படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வந்த இந்த பிரைடே ஈவினிங் ஷோவில் முதன்முதலாக திரையிடப்படும் தமிழ்ப்படம் என்கிற பெருமையை ‘மெர்சல்’ பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல, ஜப்பானில் நான்கு இடங்களில் திரையிடப்படும் முதல் தமிழ்ப்படமும் ‘மெர்சல்’ தான்.