மெர்குரி ரிலீஸ் ; பின்வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்..!

Karthik_Subbaraj

தமிழ் திரையுலகில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவரும் விதமாகவும், பல பிரச்சனைகளுக்கு ஒரே நேரத்தில் தீர்வுகாணும் விதமாக ஒட்டுமொத்த திரையுலகமும் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளது. அதனால் தயாரிப்பாளர்கள் பலர் தனகளுக்கும் கஷ்டங்கள் இருந்தாலும் எதிர்கால நலனை மனதில் வைத்து இந்த வேலைநிருதததிற்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

இந்தநிலையில் தான் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தான் தயாரித்துள்ள ‘மெர்குரி’ படத்தை வரும் ஏப்-13ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் அதன் ஒரு பகுதியாக படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் டிவிட்டரில் அறிவித்தார்.

ஆனால் இந்த இக்கட்டான தருணத்தில் கார்த்திக் சுப்பராஜின் இந்த அறிவிப்பு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பின்வாங்கிய கார்த்திக் சுப்பராஜ், திரையுலகம் நடத்திவரும் இந்த போராட்டத்திற்கு தானும் தனது படக்குழுவினரும் முழு ஆதரவு தருவதாக கூறியுள்ளார்.