ஜர்னலிசம் படிக்கப்போகிறார் மீரா நந்தன்..!

 

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தபிறகு “இடையில் விட்ட படிப்பை தொடரப்போகிறேன்” என்று சொன்ன நடிகைகளை பார்த்திருக்கிறோம். ஆனால் தமிழில் ‘வால்மீகி’ படம் மூலம் அறிமுகமான மலையாள நடிகை மீரா நந்தன் தற்போது தமிழில் ‘சண்டமாருதம்’ உட்பட பத்துக்கும் குறையாமல் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் தொலைதூரக் கல்வியை தொடரப்போவதாக அவர் சொல்லியிருப்பது தான் வியப்பளிக்கிறது.

அதிலும் குறிப்பாக இவருக்கு ஜர்னலிசம் படிக்கத்தான் ஆசையாம். அதனாலேயே மணிப்பால் யுனிவர்சிட்டியில் தொலைதூரக்கல்வி மூலம் மாஸ் கம்யூனிகேசன் மற்றும் ஜர்னலிசம் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளார். சினிமாவிற்கு பின் வரும் எதிர்காலத்தில் இந்தப்படிப்பு தான் தனக்கு கைகொடுக்கும் என நம்புகிறார் மீரா நந்தன்.

அதுமட்டுமல்ல, ஏற்கனவே மலையாளத்தில் ‘லோக்பால்’ என்கிற படத்தில் மோகன்லாலுடன் சேர்ந்து ஜர்னலிஸ்டாக நடித்து தனது ஆசையையும் தீர்த்துக்கொண்டார் மீரா நந்தன். அதனால் அந்த படிப்பின் மீதான ஆர்வமா அவருக்கு அதிகமாக, கவனமாக படிக்கவேண்டியதன் காரணத்தினால் வரும் நாட்களில் படங்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள முடிவுசெய்திருக்கிராராம் மீரா நந்தன்.