‘சண்டக்கோழி-2’வில் மீரா ஜாஸ்மின்..!

பெரும்பாலான இயக்குனர்கள் தங்களது ஹிட் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கும்போது முதல் பாகத்தில் நடித்த நடிகர்களையும் அடுத்த பாகத்தில் தொடர வைப்பதில்லை.. இயக்குனர் ஹரியைப்போல ஒரு சிலர் மட்டுமே கதைக்கும் கேரக்டருக்கும் கண்டினியூட்டியை சரியாக கொடுப்பார்கள். அந்த வரிசையில் லிங்குசாமி இயக்கவுள்ள ‘சண்டக்கோழி-2’வில் விஷாலுடன் முதல் பாகத்தில் நடித்த மீரா ஜாஸ்மினுக்கும் ஒரு இடம் இருக்கிறதாம்.

சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘சண்டக்கோழி’ படத்தில் மீரா ஜாஸ்மின் கேரக்டருக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்திருந்தார்கள். அவரும் சிறப்பான, துடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இப்போது ‘சண்டக்கோழி-2’விழும் அவர் தொடர்கிறார். ஆனால் கிட்டத்தட்ட அது சிறப்பு தோற்றமாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷாலுக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகி நடிப்பார் என தெரிகிறது.