தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ‘மருது’ இசை வெளியீடு..!

marudhu 1

‘கொம்பன்’ முத்தையா இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘மருது’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தெலுங்கு வருட பிறப்பு அன்றும் பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை மறுநாளான தமிழ் வருட பிறப்பு அன்றும் (ஏப்-14) வெளியிட தீர்மானித்துள்ளார்கள். படத்தை எப்படியும் மேமாதம் திரைக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்களாம்.