இரண்டாவது வெற்றிக்கு முன்னுரை எழுதும் மனோபாலா..!

‘சதுரங்க வேட்டை’ ஆடி ருசி கண்டுவிட்ட பூனை சும்மா இருக்குமா..? இதோ அடுத்து ‘பாம்பு சட்டை’ படத்தை தயாரிப்பதன் மூலம் மீண்டும் பாலை குடிக்க தயாராகி விட்டது. ஆம். மனோபாலா தயாரிக்கும் இரண்டாவது படம் தான் ‘பாம்பு சட்டை’.  ‘ஜிகர்தண்டா’ வில்லன் பாபி சிம்ஹா இந்தப்படத்தில் ஸ்ட்ரெயிட்டாக ஹீரோ புரமோஷன் பெற்றிருக்கிறார்..

சிம்ஹாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க, மேலும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில்‘தாமிரபரணி’ பானு நடிக்கிறார். இந்தப்படத்தை இயக்கும் புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் ஷங்கரிடம் இணை இயக்குனராக வேலை பார்த்தவர்.  ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றிபெற்ற அஸீஸ் அசோக் இந்தப்படத்தில் இசையமைப்பளாராக அறிமுகமாகிறார். இந்தப்படத்தை ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் மனோபாலவுடன் இணைந்து தயாரிக்கின்றனர்.  இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கியுள்ளது.