தனுஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் மஞ்சு வாரியர்

மலையாள நடிகை மஞ்சு வாரியர் பல வருடங்களுக்கு முன் பரபரப்பு கதாநாயகியாக இருந்த போதும் சரி, இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் சரி தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடித்து வருகிறார்..

அதே சமயம் தான் வீட்டில் இருந்த காலத்திலும், கடந்த இரண்டு வருடங்களிலும் கூட தமிழ் திரையுலகில் இருந்து நடிப்பதற்கு பல முறை அழைப்பு வந்தாலும் அவற்றை ஏற்க மறுத்து, மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் மஞ்சு வாரியர்…

ஒருவழியாக தற்போது அவரை தமிழுக்கு அழைத்து வந்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். ஆம்.. தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் மஞ்சு வாரியர். வெற்றிமாறன் சொன்ன கதை மஞ்சு வாரியருக்கு பிடித்துவிடவே, தனது பிடிவாதத்தை தளர்த்தி தமிழில் நடிக்க சம்மதித்துவிட்டாராம். ஜன-26ஆம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.