விக்ரம் பிரபு ஜோடியாக மஞ்சிமா மோகன்..!

manjimamohan
மலையாளத்தில் வெளியான ‘ஒரு வடக்கன் செல்பி’ படத்தில் அறிமுகமான மஞ்சிமா மோகன் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்துவிட்டார். அந்த சூட்டோடு தமிழில் கௌதம் மேனன் டைரக்சனில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்பு ஜோடியாக வாய்ப்பு தேடிவர, அதிலும் நடித்து முடித்து விட்டார்.

அடுத்ததாக விக்ரம் பிரபு ஜோடியாக ஒருபடத்தில் நடிக்க இருக்கிறார் மஞ்சிமா. சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளார். இதற்காக மஞ்சிமாவுக்கு ஆடிஷன் வைக்கப்பட்டு அதில் பர்பெக்ட்டாக ஒகே ஆகிவிட்டார். வரும் ஜனவரியில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறதாம்.