இந்தியில் படம் தயாரிக்கிறார் இசையமைப்பாளர் மணிசர்மா..!

விஜய் நடித்த ‘யூத்’, ஷாஜகான்’, மற்றும் ‘போக்கிரி’’ உட்பட பல படங்களில் துள்ளலாக இசையமைத்து தமிழில் பிரபலமானவர் இசையமைப்பாளர் மணிசர்மா. சொல்லப்போனால் விஜய் ரசிகர்களை தியேட்டர்களில் எழுந்து ஆடவைத்த பாடல்களுக்கு சொந்தக்காரர்.

தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக உள்ள இவர் தற்போது ஒரு ‘மும்பை 125 கிமீ’ என்கிற படத்தின் மூலம் ஒரு இணை தயாரிப்பாளராக இந்தியிலும் கால் பதித்திருக்கிறார்.. படம் இந்தியில் தயாரானாலும் ரிலீசாகும் நேரத்தில் தமிழ், தெலுங்கு இரண்டிலுமே டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளாராம் மணிசர்மா..!