மணிரத்னம் படத்தின் டைட்டிலாக கமல் பாடல் வரி..?

 

தூங்கிக்கொண்டிருந்த சிங்கம்…. ஸாரி.. உவமை சரியாக இல்லை.. வேண்டுமானால் இப்படி சொல்லலாம்… பதுங்கியிருந்த புலி இப்போது பாய்சலுக்கு தயாராகிவிட்டது. வேறு யார்.. நம்ம மணிரத்னம் சார் அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார். இந்தப்படத்தில் மம்முட்டியின் மகனும் வாயை மூடி பேசவும் ஹீரோவுமான துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார்.

துல்கருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். மலையாளத்தில் ஏற்கனவே துல்கருடன் இரண்டு படங்களில் நடித்த இவர் அவருடன் இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் இது. பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப்படத்திற்கு ‘ஓகே கண்மணி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது இருபது வருடங்களுக்கு முன் ‘சிங்காரவேலன்’ படத்தில் கமல் பாடிய “போட்டுவைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி’ என்ற பாடலில் இடம்பெற்ற பிரசித்த பெற்ற வரி ஆகும். சென்னையை மையமாக வைத்து இதன் கதை உருவாகியுள்ளதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் சில பகுதிகளில் நடைபெற்று வருகிறது.