வைரமுத்துவிடம் மூன்று நிமிடம் மட்டுமே கதை சொன்ன மணிரத்னம்..!

மணிரத்னம் பட வசனங்கள் பலவே அவரது கதைசொல்லும் பாணியும் ஷார்ட் அன்ட் ஸ்வீட்டாக இருக்கும் என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.. வைரமுத்துவிடம் கதைசொல்ல உட்காரும்போது எந்தப்படங்களுக்கும் அவர் அதிகபட்சம் மூன்று நிமிடங்களுக்கு மேல் எடுத்துக்கொள்ள மாட்டாராம. காரணம் மூன்று நிமிடங்களுக்குள் விளக்க முடியாத ஒரு கதை, கதையே அல்ல என்பதுதான் மணிரத்னத்தின் எண்ணமாம்.

அப்படித்தான் ஓ காதல் கண்மணி படத்தின் கதையையும் சொன்னாராம் மணிரத்னம். “இரண்டு பாத்திரங்கள், அவர்களுக்குள் ஒரு காதல், அவர்களுக்குள் ஒரு நிபந்தனை, அவர்களின் மனநிலை, எண்ண ஓட்டம் இவைகளைப்பற்றிய கோடுகளை மட்டும் வரைந்து காட்டுவார். சித்திரத்தை நான் வரைந்துகொள்ள வேண்டும். இதுதான் மணிரத்னத்தின் தனி பாணி என நான் நினைக்கிறேன்” என்கிறார் வைரமுத்து.