விஜய் யேசுதாஸை படைவீரனாக மாற்றிய மணிரத்னம் சீடர்..!

padaiveeran poster
பின்னணி பாடகராக இருந்தாலும தனக்கும் நடிக்கும் ஆசை உண்டு என்பதை ‘மாரி’ படத்தின் வில்லனாக நடித்து வெளிப்படுத்தினார் விஜய் யேசுதாஸ். அடுத்த கட்டம். ஹீரோதானே..? ஆம்.. ‘படைவீரன்’ என்கிற படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார் விஜய் யேசுதாஸ். தேனி மாவட்டத்தில் உயிர்ப்போடு வாழும் ஒரு கிராமமும்…அதன் மண்சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையுமாக உருவாகும் படம் “படைவீரன்”.

இந்தப்படத்தில் அம்ரிதா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கின்றார். கதையின் களம் மிகவும் பிடித்திருந்ததால் இயக்குனர் இமயம் பாரதிராஜா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும் “கல்லூரி” அகில், கலையரசன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ‘கடல்’, ‘ஓ காதல் கண்மணி’ ஆகிய படங்களில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்த தனா, இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். கார்த்திக்ராஜா இசையமைக்கிறார்.