“மணிரத்னம் சிஷ்யன்னு நிரூபிச்சிட்டார்” ; பாரதிராஜா பாராட்டியது யாரை தெரியுமா..?

bharathiraja 3

‘நாயகன்’ படத்தில் கமல் பேசும் வசனம் ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பு இல்ல’.. இன்றுவரை உயிர்ப்புடன் இருந்துவரும் இந்த வசனத்தையே தலைப்பாக வைத்து சமூக நோக்கிலான ஒரு படத்தை உருவாக்கியுள்ளார் தினேஷ் செல்வராஜ் என்கிற அறிமுக இயக்குனர்..

ஆச்சர்யம் என்னவென்றால் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் படங்களுக்கு உயிர்நாடியாக விளங்கிய கதாசிரியர் ஆர்.செல்வராஜின் மகன் தான் இந்த தினேஷ் செல்வராஜ்.. அதுமட்டுமல்ல மணிரத்னத்தின் உதவியாளரும் கூட.. சமீபத்தில் இந்தப்படத்தை பாரதிராஜாவை அழைத்து திரையிட்டு காட்டியுள்ளார் தினேஷ் செல்வராஜ்.

படத்தை பார்த்துவிட்டு “மணிரத்னத்தின் சிஷ்யன் என்பதை தினேஷ் செல்வராஜ் சரியாக நிரூபித்துள்ளார்.. சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை எந்தவித சமரசமும் இல்லாமல் படமாக்கியிருக்கிறார்” என நண்பனின் மகன் குறித்து பெருமையுடன் பாராட்டியுள்ளார் பாரதிராஜா.