மணிரத்னம் – கார்த்தி கூட்டணியில் உருவாகும் ‘காற்று வெளியிடை’..!

kaatru veliyidai first look
மணிரத்னம் இயக்கும் படம் ஒன்று ரிலீஸான கொஞ்ச நாள் கழித்து அவரது அடுத்த படம் பற்றிய யூகங்களும் வதந்திகளும் மீடியாக்களில் றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிடும்.. அப்படித்தான் ‘ஒகே கண்மணி’ படம் முடிந்ததும் பல யூகங்கள் செய்தி வடிவங்களாக மாறின. எல்லோரும் ஒரு புயலை எதிர்பார்த்து காத்திருக்கும்போது பூ அசைவது போல சத்தமே இல்லாமல் தனது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மணிரத்னம் அறிவிப்பதுதான் வழக்கம்.

அப்படித்தான் தனது அடுத்த படத்தின் பெயர் ‘காற்று வெளியிடை’ என்றும் கார்த்தி நாயகனாகவும், அதிதி ராவ் நாயகியாகவும் நடிக்கிறார்கள் என அறிவிப்பு செய்துள்ளார் மணிரத்னம். படத்திற்கு இசையமைப்பது சாட்சாத் இளம்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான். பாடல்களை எழுதுவது வைரமுத்து தான். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கவனிக்கிறார் ஸ்ரீகர்பிரசாத். இதன் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது..